Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

07:41 PM Oct 10, 2024 IST | Web Editor
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 2,3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
news7 tamilrain alertRain Updaterainfalltamil naduTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article