Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை!

07:25 AM Dec 19, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. அது இன்று (டிச.19) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், நாளை மறுதினம் (டிச.21) நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி, நகர்ந்து 23, 24-ம் தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன்காரணமாக இன்று (டிச.19) வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நாளை மிதமான மழையும், நாளை மறுதினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் மழை குறைந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article