Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | காலை10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?

07:39 AM Nov 16, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : #INDvsSA | கடைசி டி20 போட்டி… தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
IMDrain alertrainsTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article