Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

05:24 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று (29.08.2024) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செப்.3 வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே, இன்று (ஆக.29) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கடுத்த இரண்டு தினங்களில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
IMDRail AlertrainfallWeatherWeather Update
Advertisement
Next Article