Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

07:27 AM Dec 01, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. விடாமல் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன.

சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததை அடுத்து சற்று மழை ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விவரம்:

சிவப்பு நிற எச்சரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி

ஆரஞ்சு நிற எச்சரிக்கை

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்

மஞ்சள் நிற எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி

Tags :
Fenjal CycloneRainrain alertRain UpdateTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article