Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

07:30 AM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று (டிச.9) கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும்  மழைக்கு வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
#ClimateRainrain alertTamilNaduWeather Update
Advertisement
Next Article