Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீர்காழியில் கோயில்களுக்குள் புகுந்த மழை நீர் - பக்தர்கள் அவதி!

03:52 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.07) பெய்த தொடர் கனமழையால், சீர்காழி பகுதியில் உள்ள கோயில்களுக்குள் மழை நீர் புகுந்தது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.07) தொடர் கனமழை பெய்தது.  இதனைத் தொடர்ந்து சீர்காழியில் 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக சீர்காழியில் உள்ள சட்டை நாதர் கோயில் பிரகாரங்களில் தண்ணீர் தேங்கியது. இதே போல் அம்மன் சன்னதி,  ருனம் தீர்த்த விநாயகர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து நின்றதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

இதையும் படியுங்கள்: இலங்கை: கொட்டும் மழையில் நடைபெற்ற பொங்கல் விழா!

சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமையான
செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலுக்கு
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.  இந்த நிலையில் நேற்று (ஜன.07) முதல்  பெய்து வரும் கனமழையால் கோயிலின் உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கோயில் நிர்வாகம் கோயிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில்
ஈடுபட்டு வருகிறது.

Tags :
Heavy rainfallMayiladuthurainews7 tamilNews7 Tamil UpdatesSirkazhitamil naduTemple
Advertisement
Next Article