Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மழை தொடர்பான இலவச உதவி எண் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

11:17 AM Nov 14, 2023 IST | Student Reporter
Advertisement

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  நேற்று இரவு  நேரத்தில் சென்னை,  திண்டுக்கல்,  ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.  இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை,  தஞ்சை,  திருவாரூர்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,  ராமநாதபுரம்,  விருதுநகர், தூத்துக்குடி,  தென்காசி,  நெல்லை,  கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள்:  சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனிடையே சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை  சென்னை மாநகராட்சி அறிவித்தது.

1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மழை சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம்.  மேலும் 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களிலும் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Tags :
#HelplineChennaiChennai corporationChennai rainshelpline numberNews7 Tamil News7 Tamil UpdatesRainTamilNaduWhatsApp number
Advertisement
Next Article