7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 9ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இற்கிடையே, தமிழ்நாட்டில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று (மே 4) தொடங்கியது.
இதையும் படியுங்கள் : தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென நடந்த சோக சம்பவம்.. துக்கத்தில் உறைந்த குடும்பம்!
இதனையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் வெயில் வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் திடீரென வானிலை மாறியது. லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் பறந்து விழுந்தன.
சுமார் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு பிறகு மழை விட்டது. மழை வெயிலின் தாக்கத்தை குறைத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.