சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மழை | இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
08:06 AM Jan 03, 2024 IST
|
Web Editor
Advertisement
சென்னை உள்பட மூன்று மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் இனி மாநிலம் முழுவதும் லேசான மற்றும் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Article