வெயிலுக்கு இதமாக மதுரையை சூழ்ந்த மழை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இரவு 7 மணியிலிருந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக மாலை 5 மணியளவில் சென்னை, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. மதுரை புறநகர் மாநகர் பகுதிகளில், காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள உத்தங்குடி, ஒத்தக்கடை, கே.புதூர் தல்லாகுளம் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது.
இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பூவிருந்தவல்லி உள்ளிட்டப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.