Rain Alert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடக்கு திசையில் நகர்ந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இதையும் படியுங்கள் : PBKS vs DC | பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
மேலும், இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.