Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Rain Alert | 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... எங்கெல்லாம் தெரியுமா?

02:13 PM Jun 12, 2025 IST | Web Editor
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜுன் 12) முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவை, நிலகிரியில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அங்கு விரைந்துள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் 
இன்று (ஜுன் 12)
மஞ்சள் அலர்ட் 
நாளை (ஜுன் 13)
ஆரஞ்சு அலர்ட்

மஞ்சள் அலர்ட்

நாளை மறுநாள் (ஜுன் 14)

ரெட் அலர்ட்

ஆரஞ்சு அலர்ட் 

  • கோயம்புத்தூர்

ஜுன் 15

ரெட் அலர்ட்

  • நீலகிரி

ஆரஞ்சு அலர்ட்

  • கோயம்புத்தூர்
  • தேனி
  • தென்காசி
  • திருநெல்வேலி
Tags :
IMDnews7 tamilRail AlertRainRain Updatered alertWeatherWeather Update
Advertisement
Next Article