#Rain Alert | ஜனவரி 4 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு !
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (29-12-2024) முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.