Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் யார் தெரியுமா? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

03:32 PM Nov 29, 2023 IST | Web Editor
Advertisement

இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

Advertisement

2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளியேறிய பிறகு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.  அதன்பின்,  அவரது பயிற்சியின்கீழ் இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது.  இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்,  ஒருநாள் உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இதற்கிடையே,  உலகக் கோப்பை ஒருநாள் தொடருடன் இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளருக்கான இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.  இதனைத் தொடர்ந்து, மீண்டும் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து,  அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மனும் தொடர்வார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து,  அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியுடன் ராகுல் டிராவிட்டும் பயணிக்கவுள்ளார்.

Tags :
BCCIcontractsCricket World Cup 2023CWC 23extendingHeadCoachICC Cricket World CupICC World Cup 2023Indiaindian teamJay Shahmatchnews7 tamilNews7 Tamil UpdatesWorld Cup 2023World Cup 23World Cup Final 2023
Advertisement
Next Article