Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிசிசிஐயின் கூடுதல் பரிசுத்தொகைக்கு மறுப்பு தெரிவித்த ராகுல் டிராவிட் - என்ன நடந்தது?

07:44 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத் தொகை இருக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ கொடுத்த பரிசுத் தொகையை ராகுல் திராவிட் பாதியாக குறைத்துக்கொண்ட நிகழ்வு தெரியவந்துள்ளது.

Advertisement

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ஏற்கெனவே அறிவித்து இருந்தார். ரூ.125 கோடியில் அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடியும், இவர்கள் தவிர, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு ரூ.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான், சக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.5 கோடியே தனக்கும்போதும் என்று ராகுல் டிராவிட் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ வழங்கிய முழு பரிசுத் தொகையை ஏற்க மறுத்து, சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத்தொகை இருக்க வேண்டும் எனக் கூறி ரூ.5 கோடிக்கு பதிலாக அதில் பாதியை ரூ.2.5 கோடியை மட்டும் ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.

தற்போது இந்திய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
BCCIJaishahNews7Tamilnews7TamilUpdatesRahul dravidrewardT20 World CupTeam India
Advertisement
Next Article