"இந்தி மட்டுமல்ல எல்லா விதமான திணிப்புக்கும் எதிரான படம்தான் ரகு தாத்தா" - இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் பேச்சு!
"இந்தி மட்டுமல்ல எல்லா விதமான திணிப்புக்கும் எதிரான படம்தான் ரகு தாத்தா” என இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
ரகு தாத்தா' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக திரைப்படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனத்தை பெற்றது.
இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. அதில், இயக்குநர் ஹிந்தியைக் கையில் எடுத்திருக்கிறார். நல்ல நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்" என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.