Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தோல்வி அடைந்ததால் ஆத்திரம்...டென்னிஸ் ராக்கெட்டை அடித்து உடைத்த அல்கராஸ்! #ViralVideo

12:24 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

டென்னில் போட்டியில் தோல்வி அடைந்த கார்லோஸ் அல்கராஸ், அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்றின் ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), கெயில் மான்பில்ஸ் (பிரான்ஸ்) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றினார்.

ஆனால் அடுத்த 2 செட்டுகளையும் மான்பில்ஸ் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். முடிவில் மான்பில்ஸ் 4-6, 7-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் அல்காரசை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் அல்காரஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததை அல்கராஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால், அவர் டென்னிஸ் ராக்கெட்டை (பந்தாட்ட மட்டை) மைதானத்தில் பல முறை ஓங்கி அடித்து உடைத்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Carlos AlcarazCincinnati Open TennisTennisviral video
Advertisement
Next Article