Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் - தனுஷ் அதிருப்தி.!

ரீரிலீஸ் செய்யப்பட்ட ராஞ்சனா கிளைமேக்ஸில் ஏஐ மூலம்  மாற்றி அமைக்கப்பட்டது தொடர்பாக நடிகர் தனுஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
11:27 AM Aug 04, 2025 IST | Web Editor
ரீரிலீஸ் செய்யப்பட்ட ராஞ்சனா கிளைமேக்ஸில் ஏஐ மூலம்  மாற்றி அமைக்கப்பட்டது தொடர்பாக நடிகர் தனுஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என குளோபல் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு , இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான  ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷிற்கு, ஜோடியாக  சோனம் கபூர் நடித்தார். மேலும் இப்படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த பாலிவுட்டில் தனுஷிற்கு நல்ல அறிமுகத்தை தந்தது. வசூல் ரீதியாக  இந்த திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து. மேலும் தனுஷ் மற்றும் சோனம் கப்பூரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.  ஏஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றன.இந்த படம் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழிலும் வெளியாகி வெற்றி பெற்றது.

Advertisement

இந்த நிலையில் (ஜூலை 28) தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் ஒரிஜினல் க்ளைமாக்சில் தனுஷ் இறப்பது போன்று அமைந்திருக்கும். ஆனால் ரீரிலீஸ் செய்யப்பட்ட ராஞ்சனா க்ளைமாக்ஸில் ஏஐ மூலம்  தனுஷ் உயிரோடு இருப்பது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது ராஞ்சனா படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஞ்சனா இயக்குநர் ஆனந்த் எ.ராய், ராஞ்சனா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டதில்  தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஞ்சனா கிளைமேக்ஸ் மாற்றப்பட்டது தொடர்பாக தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஏஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ படம் ரீ-ரிலீஸ் ஆனது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.மாற்றப்பட்ட இறுதிக் காட்சி, படத்தின் அசல் ஆன்மாவை சிதைத்து விட்டது; என்னுடைய தெளியான ஆட்சேபனையை தாண்டி படக்குழு இதை செய்திருக்கிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக் கொண்ட படம் இதுவல்ல; திரைப்படங்களையும், உள்ளடக்கங்களையும் ஏஐ உதவியுடன் மாற்றுவதென்பது கலைக்கும் கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.கதை சொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் இது அச்சுறுத்துகிறது; எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் விதமாக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
aiamabikavathiananthlroycinimanewsclimaxchangdanushranjanaaranjanaarerelease
Advertisement
Next Article