Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

02:04 PM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement

உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட  மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து இந்த 2 காலியிடங்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக  D.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
justicemadras highcourtPresident Droupadi MurmuR MahadevanSupreme court
Advertisement
Next Article