Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9.13 லட்ச பேர் விண்ணப்பம்!

09:52 PM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி அக்டோபர் 27 தொடங்கியது. வாக்காளர்கள் மற்றும் பணிக்குச் செல்வோரின் வசதிக்காக, நவம்பர் மாதத்தில் இரண்டு சனி மற்றும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம், திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் வாக்காளர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து அளித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்ய இதுவரை 4,99,302 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1,21,046 பேர் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளிடப்படுகிறது. மேலும் திருவண்ணாமலையில் தீப திருநாளையொட்டி ஒத்திதிவைக்கப்ட்ட சிறப்பு முகாம், டிச.2, 3ல் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
ELECTION COMMISSION OF INDIANews7Tamilnews7TamilUpdatesQuick voter listSatyapratha Sagutamil nadu
Advertisement
Next Article