Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோலாகலமாக நடைபெற்ற பி.வி.சிந்து திருமண வரவேற்பு விழா... குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகர் அஜித்!

07:30 AM Dec 25, 2024 IST | Web Editor
Advertisement

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு விழாவில், குடும்பத்துடன் கலந்துகொண்டு நடிகர் அஜித் மணமக்களை வாழ்த்தினார்.

Advertisement

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள இவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

https://twitter.com/ThalaAjith_FC/status/1871592041421119793

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிவி. சிந்து -  வெங்கட தத்தா சாய் ஆகியோரது திருமணம் ஏற்கனவே அறிவித்த படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினரும், சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்று வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
actor ajithHyderabadpv sindhuwedding reception
Advertisement
Next Article