Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அப்படி போடு..12 வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி!

08:45 PM Mar 25, 2024 IST | Web Editor
Advertisement

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான இரண்டாவது தகுதிச் சுற்று மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி  மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின் மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும் ஐபிஎல் குவாலிபயர் மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சென்னையில் இறுதிப்போட்டி நடைபெற்றது.

மே 24-ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியும், மே 26 ஆம் தேதி இறுதிப் போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது.

Tags :
#SportsBCCIChennaiChepakkam StadiumCricketIPLIPL 2024IPL Final
Advertisement
Next Article