"புஷ்பா 2 ஒரு Wild Fire" | நிரம்பி வழியும் தியேட்டர்கள் - BoxOfficeல் புதிய சாதனை!
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் நேற்று ( டிசம்பர் 5-ஆம் தேதி) பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது. அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.
புஷ்பா 2 திரைப்படமானது தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே முன்பதிவில் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்திற்கு முன்பதிவு இணையத்தில் மட்டும் 30 லட்ச டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 250 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புஷ்பா 2 படம் முதல் நாளில் ரூ.180கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் மற்றும் பாகுபலி படத்தின் முதல் நாள் வசூலை விட அதிக வசூல் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியிலும் கடந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. எனிலும் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.