Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூரி ஜெகன்னாதர் கோயில் - 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!

01:45 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது கோயில் நிர்வாகத்திடம் இந்தப் பரிந்துரையை வழங்கவுள்ளது. இதன்பின்னர் ஒடிசா மாநில அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்துப் போனதாக சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்கள் அதிகளவில் பேசப்பட்டன. இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கக்கோரி மாநில அரசுக்கு பரிந்துரை வழங்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக விஷ்வநாத் ராத் தகவல் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம்.. சரணடைந்தவர் கொள்ளப்பட்டது ஏன்? – இபிஎஸ் கேள்வி!

இது தொடர்பாக விஷ்வநாத் ராத் கூறியதாவது :

"பொக்கிஷ அறையின் மாதிரி சாவியை வருகிற 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம். ஒருவேளை மாதிரி சாவியைக் கொண்டு அறையை திறக்க முடியவில்லை என்றால் பூட்டை உடைக்கவும் முடிவு செய்துள்ளோம். எனவே, சாவி இருந்தாலும் இல்லையென்றாலும் வருகிற 14ம் தேதி, கோயிலின் பொக்கிஷ அறையை திறப்பது உறுதியானது.

இதனால், மக்களின் எதிர்பார்ப்பு முழுவதும் கோயில் பக்கம் திரும்பியுள்ளது. ஏனெனில் வட மாநிலங்களில் ஒரு முக்கிய கோயில் இது. அந்தப் பொக்கிஷ அறையில் இருக்கும் தங்கம் எவ்வளவு இருக்கிறது என்ற கணக்கு வெளியாகும்வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
#opened4 decadesLockodishaPuri Jagannath Templetreasuretrove
Advertisement
Next Article