Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிரடி காட்டிய பஞ்சாப் - ஹைதராபாத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு!

06:18 PM May 19, 2024 IST | Web Editor
Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. 

Advertisement

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.  இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று நடைபெறும் 2 போட்டிகளுடன், லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் 69-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங் - அதர்வா டைடே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். அதர்வா 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையும் படியுங்கள் : அஜித் நடிக்கும் "Good Bad Ugly" படத்தின் அப்டேட் - இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு!

பின்னர் பிரப்சிம்ரன் மற்றும் ரூசோ இருவரும் கைகோர்த்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரூசோ 49 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 32 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 215 ரன்கள் வெற்றி இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Tags :
IPLIPL 2024pkbsPKBSvsSRHSRHSRHvsPKBS
Advertisement
Next Article