Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

09:54 PM Apr 13, 2024 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

Advertisement

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் 27-வது லீக் ஆட்டம் இன்று முல்லன்பூரில் நடைபெற்றது.  இதில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சாம் கர்ரன் பஞ்சாப் அணியை வழிநடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.  பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதர்வா தைடே 18 ரன்னிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ரன்னிலும் அவுட் ஆகினர்.  இதையடுத்து பேர்ஸ்டோவுடன் கேப்டன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார்.

இதில் பேர்ஸ்டோ 15 ரன்னிலும், சாம் கர்ரன் 6 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங் 9 ரன்னிலும் அவுட் ஆகினர்.  அடுத்ததாக களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா 29 ரன்னில் அவுட் ஆனார்.  பின்னர் ப்ரம்சிம்ரன் சிங்கிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களமிறங்கினார்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.  பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ரன்னும், ஜித்தேஷ் சர்மா 29 ரன்னும் எடுத்தனர்.  ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Tags :
IPL2024pbks vs rrPunjab KingsRajasthan RoyalsRR vs PBKS
Advertisement
Next Article