பஞ்சாப் வெள்ள பாதிப்பு பேரிடராக அறிவிப்பு!
வட இந்திய மாநிலங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர், உத்ரகண்ட் போன்ற மாநிலங்கலில் மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பாதிப்பில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் அறுவடைக்கு தயாராகியிருந்த 3.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளரும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2025-ன் கீழ் மாநில நிர்வாகக் குழுவின் தலைவருமான கே.ஏ.பி. சின்ஹா, மாநிலத்தின் 23 மாவட்டங்களை வெள்ளம் பாதித்தப் பகுதிகளாக அறிவித்துள்ளார்.
மேலும் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ் தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விரைவான மநடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும் (DDMAs) அறிவுறுத்தப்பட்டுள்ளது.