புதுச்சேரி சட்டபேரவை இன்று கூடுகிறது!
புதுச்சேரியின் சட்டசபையின் 6வது கூட்டத் தொடரின் 2ம் பகுதி கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிரைவேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.
தொடர்ந்து கூட்டத்தில் ஜி.எஸ்.டி., திருத்த மசோதா, புதுச்சேரி எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில், மின்துறை தனியார் மயம், மின் மீட்டர் விவகாரம், குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம், இலவச அரிசி நிறுத்தம், இலவச கோதுமை, சென்டாக் கல்வி நிதி, மகளிர் உதவித் தொகை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தொடர்ந்து எத்தனை நாட்கள் சபை நடத்தப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து தெரிவிக்கப்படும்.