Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரி : மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

09:23 PM Jul 18, 2024 IST | Web Editor
Advertisement

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதிளில் அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டபடி நாளை தேர்வுகள் நடைபெறும் எனவும் பிராந்திய நிர்வாகி மோகன்குமார் அறிவித்துள்ளார்.

Tags :
Heavy rainMahePuducherryschool leave
Advertisement
Next Article