Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனுமதியின்றி செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு…!

12:04 PM May 20, 2024 IST | Web Editor
Advertisement

நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக யுஜிசி பட்டியல் வெளியிட்டுள்ளது.

Advertisement

பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலின் மூலம் நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த பட்டியலின் அடிப்படையில்,  டெல்லியில் 8  பல்கலைக்கழகங்களும், உத்தரப்பிரதேசத்தில் 4 ம்,  ஆந்திர பிரதேசம்,  மேற்கு வங்கம்,  கேரளாவில் தலா 2-ம், மகாராஷ்டிரா,  கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1 பல்கலைகழகங்கள்  இடம்பெற்றுள்ளன.

மேலும்,  தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.  பிற மாநிலக் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்தப் பட்டியலை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான விவரங்களை யுஜிசியின் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

Tags :
IndiaUGCUniversity Grants CommissionUniversity List
Advertisement
Next Article