Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று இரவு விண்ணில் பாய்கிறது PSLVC-60 ராக்கெட் !

07:05 AM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Advertisement

விண்​வெளி ஆராய்ச்​சி​யில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. தற்போது எதிர்கால தேவையை கருத்​தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்​குள் விண்​வெளி​யில் நிறுவ இஸ்ரோ திட்​ட​மிட்​டுள்​ளது. அதற்கான முன்​ த​யாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ​ஒரு ​பகு​தியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்​டத்​தின்​ கீழ் விண்ணில் விண்​கலன்களை ஒருங்​கிணைக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்பட உள்ளன.

இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்​கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது. இந்த இரட்டை விண்​கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்​ட​வை​யாகும். இவை பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் வாயிலாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து இன்று (டிச. 30) இரவு 9.58 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்ளது. ராக்​கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்​ட​வுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.

இந்த விண்​கலன்கள் புவி​யில் இருந்து 476 கி.மீ தூரம் கொண்ட வெவ்​வேறு சுற்றுப்​பாதைகளில் நிலை நிறுத்​தப்பட உள்ளன. சில மாதங்​களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்​படும் என்றும் இது தவிர ராக்​கெட் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்​திரத்​தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) என்ற பரிசோதனை​யும் மேற்​கொள்​ளப்பட உள்ளது.

மேலும் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள சூழலில், தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது பற்றி தமிழக மீன்வள துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
AndraISROPSLV C-60rocketScientistsSriharikotatonight
Advertisement
Next Article