Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு நாம் அவருக்கு வழங்கும் பரிசு” - கனிமொழி எம்.பி!

08:39 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

“நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் முதலமைச்சரின் பிறந்த
நாளுக்கு நாம் அவருக்கு வழங்கும் பரிசாக அமையும்” என திமுக தொண்டர்களுக்கு
கனிமொழி எம்.பி அறிவுறுத்தியுள்ளார். 

Advertisement

சென்னை கேகே நகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 நபர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு
விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.

மகளிர் அணி அலுவலகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின்பொழுது
சிறப்பு விருந்தினர் கனிமொழிக்கு திமுக மாவட்ட அமைப்பாளர் கனிமொழி தனசேகரன்
மாலையை அணிவித்து சாக்லேட் கொண்ட பூங்கொத்திணை வழங்கினார். மேலும் போர்வாளினை வழங்கி சிறப்பித்தார். மகளிர் அணி அலுவலகத்தினை குத்து விளக்கு ஏற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின் மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,

“நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு நாம் அவருக்கு வழங்கும் பரிசாக அமையும்” என திமுக தொண்டர்களிடம்
கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

Tags :
DMKElection2024Kanimozhi MPparlimentaryelectionvolunteers
Advertisement
Next Article