Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - 878 பேர் மீது வழக்குப்பதிவு!

பெரியாரை குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
07:59 AM Jan 23, 2025 IST | Web Editor
Advertisement

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என மே 17 இயக்கத்தினர், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. சொன்னவாரே பெரியார் இயக்கத்தை சேர்ந்த பலரும் பதாகைகளை ஏந்தி நேற்று சீமானின் வீட்டின் முன்பு குவிந்தனர்.

Advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னரே சீமான் வீட்டு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தொடர்ந்து வீட்டின் முன் குவிந்த பெரியாரிய உணர்வாளர்கள் வீட்டை முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து தடுப்புகளை மீறி செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்களை போலீசார் கைது செய்தனர். சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags :
caseNTKperiyarProtestSeeman
Advertisement
Next Article