Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

12 மணி நேர போராட்டம் | கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை பத்திரமாக மீட்பு!

07:22 AM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

தமிழக கேரளா எல்லையான அட்டப்பாடியில் 30 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆண் யானையை 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வனத்துறை மூலம் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

தமிழக கேரளா எல்லையான அட்டப்பாடி வனத்தை ஒட்டிய மலைவாழ் கிராமம் ஆகும்.
இங்கு காட்டு யானைகள் அதிகமாக நடமாடி வரும் நேற்று இரவு ஒரு மணி அளவில்
வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை அட்டப்பாடி அருகே வட்ட லக்கி என்னும் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 30 அடி கிணற்றுக்குள் தவறி
விழுந்தது.

இதனையடுத்து தோட்டத்தின் அருகே உள்ள கிணற்றில் யானை பிளிரும் சத்தம் கேட்டு
அங்கு சென்ற பொதுமக்கள் பார்த்த போது கிணற்றுக்குள் யானை இருப்பதைக் கண்டு
வனத்துறையைத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியாக ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் கிணற்றின் அருகே யானை வெளியேறும் வகையில் ஒரு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அதுவரை அந்த யானைக்கு தேவையான உணவுகளும் வனத்துறை மூலம்
வழங்கப்பட்டது. தொடர் 12 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு ஜேசிபி இயந்திரத்துடன்
ஏற்படுத்தப்பட்ட குழியின் வழியாக காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள
வனப்பகுதிக்குள் சென்றது.

Advertisement
Next Article