Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...!

திமுக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
03:54 PM Nov 21, 2025 IST | Web Editor
திமுக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Advertisement

அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

Advertisement

”திருப்பூர் மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 25.11.2025 - செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKDMKedappadipalanisawmyProtestsirTiruppurtirupurCorporation
Advertisement
Next Article