Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநில உரிமை காக்க...மத அரசியலை ஒழிக்க...மறக்காமல் வாக்களிப்போம்! - இயக்குநர் அமீர்!

06:55 AM Apr 19, 2024 IST | Web Editor
Advertisement

மாநில உரிமை காக்கவும், மத அரசியலை ஒழிக்கவும் மறக்காமல் வாக்களிப்போம் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் 2024 | முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்..!

இந்தியாவில் முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகள் மட்டுமின்றி மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளிலும்,  மணிப்பூரில் 2 தொகுதிகளிலும்,  மேகாலயா 2 தொகுதிகளிலும்,  மிசோரம் 1 தொகுதியிலும்,  நாகாலாந்து 1 தொகுதியிலும்,  ராஜஸ்தான் 12 தொகுதிகளிலும்,  சிக்கிம் 1 தொகுதியிலும்  திரிபுரா 1 தொகுதியிலும், உத்தரப் பிரதேசம் 8 தொகுதிகளிலும்,  உத்தரகாண்ட் 5 தொகுதிகளிலும்,  மேற்கு வங்கம் 3 தொகுதிகளிலும், அந்தமான நிக்கோபர் தீவுகள் 1 தொகுதியிலும்,  லட்சத்தீவு 1 தொகுதியிலும்,  ஜம்மு காஷ்மீர் 1 தொகுதி என மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில்,  இந்த மாநில உரிமை காக்க, மத அரசியலை ஒழிக்க என்றும் அனைவரும் தவறாமால் வாக்களிக்குமாறு திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்திருப்பதாவது :

"மாநில உரிமை காக்க,
மத அரசியலை ஒழிக்க
தமிழர் உரிமை மீட்க, சமூகநீதி மேம்பட, பாசிசத்தை விரட்ட

மறக்காமல் வாக்களிப்போம்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
amirChennaiDirector AmirElectionLoksabha ElectionTamilNaduvote
Advertisement
Next Article