“செவ்வாயில் குடியேறுவதைவிட, பூமியை பாதுகாப்பதே முக்கியம்” - அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா!
மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘பவர் எர்த்’ உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒபாமா, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினார். அவர் கூறியதாவது,
“அதிபர்கள் பலர் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லக்கூடிய விண்கலன்களை உருவாக்கி வருகின்றனர். செவ்வாயை பூமியின் காலனியாக மாற்ற முயல்கிறார்கள். பூமியின் சுற்றுச்சூழல் மிகவும் சீரழிந்து, வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்பதால், செவ்வாய் கிரகத்தின் காலனித்துவ திட்டத்தைப் பற்றி பலர் பேசுவதை கேட்கிறேன். அப்போதெல்லாம் அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுதான்.
இந்த பூமி தான் நம் வீடு. இந்த பூமியை பாதுகாத்து நாம் வாழக்கூடிய வகையில் வைத்திருந்தால் நன்றாக இருக்கும்" என்று தனது பாரிஸ் உச்ச மாநாட்டில் பராக் ஒபாமா பேசியுள்ளார்.