Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்!" - #PMModi

09:56 PM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம், குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடந்த லட்சாதிபதி சகோதரி சம்மேளன நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி பேசினார்.

அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரதமர் மோடி கூறியதாவது:

“நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு நாட்டிற்கு எப்போதும் முன்னுரிமையானது. செங்கோட்டையில் இருந்து நான் பலமுறை இந்த விஷயத்தை எழுப்பியுள்ளேன். இன்று நாட்டில் உள்ள எனது மகள் மற்றும் சகோதரிகளின் கோபத்தினை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்துக்குக்கும் நான் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம். குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது. அவர்களுக்கு எந்தவகையில் உதவி செய்பவர்களையும் விட்டு விடக்கூடாது.

மருத்துவமனை, பள்ளிகள், அரசு மற்றும் காவல்துறை அமைப்புகள் என எந்த நிலையில் குற்றங்கள் நடந்திருந்தாலும் அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேல்மட்டத்தில் இருந்து கீழ்நிலை வரை இந்த செய்தி தெளிவாக சொல்லப்பட வேண்டும். அரசுகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், பெண்களின் கண்ணியம் மற்றும் உயிர்களை பாதுகாப்பது அரசு மற்றும் சமூகமாக நம் அனைவரின் பொறுப்பாகும்." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,  31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,  கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம், குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
CBIDoctor MurderKolkata Death CaseKolkata Doctor MurderNarendra modiPM Modi
Advertisement
Next Article