Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாபர் சேட் மீதான வழக்கு விசாரணைக்கு தடை - #SupremeCourt அதிரடி உத்தரவு!

03:03 PM Oct 04, 2024 IST | Web Editor
Advertisement

ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட் வழக்கில் அனைத்து விசாரணைக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ரத்து செய்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம்
அமர்வு, ஜாபர் சேட்க்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆக. 23-ம் தேதி ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. வழக்கின் விளக்கங்களை பெற விசாரணையை ஆக.28-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, ஜாபர் சேட் தரப்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், “சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஜாபர் சேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை மேற்கொள்ள உள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை தொடங்கும். அதுவரையில் ஜாபர் சேட் விவகாரத்தில் அனைத்து விசாரணைக்கும் தடை விதிக்கப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
EDEnforcement DepartmentJaffer SaitMadras High CourtMHCnews7 tamilSupreme court
Advertisement
Next Article