Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை - தோ்தல் ஆணையம் உத்தரவு!

09:51 AM Mar 30, 2024 IST | Web Editor
Advertisement

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, 27 ஆம் தேதியுடன் நிடைவடைந்தது.

தமிழ்நாட்டில் திமுக,  அதிமுக,  பாஜக,  நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.  இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  அதன்படி வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடக் கூடாது.  அதன்பிறகே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும்."

இவ்வாறு இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
கருத்துக்கணிப்புELECTION COMMISSION OF INDIAElection2024Elections with News7 tamilElections2024
Advertisement
Next Article