Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு!

01:48 PM Jun 21, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்தது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே,  அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகளை அரசு செய்து தரக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,  நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்தது.  மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.  மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags :
High courtManjolaiTirunelveli
Advertisement
Next Article