Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை தாக்கல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

08:30 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படும் எனவும், தண்டனைகள் கடுமையாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அப்போது, குறுக்கிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அவர் பேசியதாவது,

“இங்கு, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத் தான் மீண்டும் உறுப்பினர் கோ.க.மணி இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை.

இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Tags :
Assembly SessionCMO TamilNaduDMK GovtKallakurichiKarunapuramMK StalinNews7Tamilnews7TamilUpdatesspecial Assembly sessionSpurious liquorTN AssemblyTN Govt
Advertisement
Next Article