‘படை தலைவன்’ வெளியீட்டில் சிக்கல் - ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
மறைந்த தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் படை தலைவன். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை யு. அன்பு என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை காட்சிபடுத்தியிருந்தனர்.
இப்படத்தின் டிரெய்ரில் நாளை(மே.23) இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் படம் வெளியீட்டுக்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படை தலைவன் தலைவன் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும்.உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி”
இவ்வாறு நடிகர் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.