Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ProKabaddiLeague | முதல் வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்!

06:48 AM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் , இந்த தொடரில் நேற்று (அக்.19) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். தமிழ் தலைவாஸ் தரப்பில் அதிகபட்சமாக நரேந்தர் 10 பாயிண்ட், சச்சின் 10 பாயிண்ட் எடுத்தனர்.

தமிழ் தலைவாஸ் வீரர்கள் 16 டேக்கிள் பாயிண்ட் எடுத்தனர். தெலுகு டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக பவண் ஷராவத் 10 ரெயிட் பாயிண்ட், விஜய் மாலிக் 9 ரெயிட் பாயிண்ட் எடுத்தனர். இறுதியில் இந்த ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது.

Tags :
Kabaddinews7 tamilPro Kabaddi LeagueTamil ThalaivasTelugu Titans
Advertisement
Next Article