Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரோ கபடி லீக் | தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.
08:25 AM Oct 08, 2025 IST | Web Editor
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Advertisement

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரட்ஸை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 37-56 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 6இல் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 7வது இடத்திலும், 11 ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வென்ற பாட்னா பைரட்ஸ் அணி 12வது (கடைசி) இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர். ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். முடிவில் 33-33 என்ற புள்ளி கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் டை பிரேக்கரில் தபாங் டெல்லி வெற்றி பெற்றது.

Tags :
Dabang DelhiHaryana SteelersKabaddiPatna PiratesPKL2025Pro KabaddiSportsSports UpdateTamil Thalaivas
Advertisement
Next Article