Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரோ கபடி லீக் | ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்!

புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பாட்னா பைரட்ஸ் வீழ்த்தியது.
11:50 AM Oct 27, 2025 IST | Web Editor
புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பாட்னா பைரட்ஸ் வீழ்த்தியது.
Advertisement

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் 12 அணிகள் பங்கேற்ற நிலையில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 8 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

Advertisement

தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் பாட்னா 48-32 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வெளியேற்றியது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 37-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது.

தோல்வியை தழுவினாலும் பெங்களூரு புல்ஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. இன்று நடைபெறும் 2-வது வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகளும், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டன்- தபாங் டெல்லி அணிகளும் மோதுகின்றன.

Tags :
Jaipur Pink PanthersKabaddiPatna PiratesPKL12Pro KabaddiSports
Advertisement
Next Article