Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரோ கபடி லீக் | பெங்களூரு புல்ஸ் அபார வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
09:19 PM Oct 11, 2025 IST | Web Editor
புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Advertisement

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி தியாகராஜர் டேடியத்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 47-26 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

அதிகபட்சமாக பெங்களூரு அணியின் அலிரேசா மிர்சாயன் 12 புள்ளிகள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, யோகேஷ் தஹியா புள்ளிகளை கைப்பற்றினார். இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 7இல் வெற்றி பெற்ற பெங்களூரு புல்ஸ்அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 5வது இடத்திலும், 13 ஆட்டங்களில் 6இல் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 8வது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி புனேரி பால்டனை எதிர்கொண்டுள்ளது. இரு அணி வீரர்களும் புள்ளிகளை அள்ளி வருகின்றனர். எந்த அணி வெல்ல போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். புனேரி பால்டன் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 2வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 6 இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Bengaluru BullsJaipur Pink PanthersKabaddiPKL2025Pro KabaddiSportsSports Update
Advertisement
Next Article