Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics மாரியப்பன் உட்பட பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை - #UnionMinister மன்சுக் மாண்டவியா வழங்கினார்!

05:12 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பரிசுத் தொகையை வழங்கினார்.

Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 28ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த பாராலிம்பிக் விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

கடைசி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை அடைந்தார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் பூஜா தகுதி பெறவில்லை. இப்போட்டியுடன் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் இந்தியா 29 பதக்கங்களுடன் 18வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பரிசுத் தொகையை வழங்கினார். இதன்படி தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ. 50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 30 லட்சமும் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.

இதேபோல பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களான மாரியப்பன், துளிசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ ஆகியோருக்கும் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வழங்கினார்.

Tags :
Mansuk MadaviyaMariyappanMedalparalympicsprize money
Advertisement
Next Article