Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வயநாடு இடைத்தேர்தல் | பிரியங்கா காந்தி பரப்புரை!

03:56 PM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், பிரியங்கா காந்தி வயநாட்டில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார்.

அங்கு பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், நீலகிரியில் பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த மாணவர்களிடம் பிரியங்கா காந்தி புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார். பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.

Advertisement
Next Article